கனடா சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்திய உத்தரவிட்டதாக கனடா குற்றச்சாட்டு

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் உளவுத்துறை தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மோரிசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
அமித் ஷாவின் தொடர்பு பற்றி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் உறுதி செய்த தகவலை, நாட்டின் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களிடம் மோரிசன் கூறியிருக்கிறார்.
எனினும், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடாவுக்கு எப்படி தெரியவந்தது? என்ற விவரத்தை மோரிசன் தெரிவிக்கவில்லை.
இதேபோல், வெளிநாட்டு மண்ணில் படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் மீது அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.
நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாத தலைவரைக் கொல்லும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், இந்திய அரசாங்கம் மீது அண்மையில் அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியது.
அமெரிக்க நீதித்துறையால் அறிவிக்கப்பட்ட இந்த வழக்கில், இந்தியாவிலிருந்து நியூயார்க்கில் கொலை திட்டத்தை செயல்படுத்த கூலிப்படையை நியமித்ததாக இந்திய முன்னாள் உளவுத்துறை அதிகாரி விகாஸ் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
