ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 months ago




சிறீலங்காவின் அரச அதிபர் அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், இனப் படுகொலைக்கு நீதி கோரி பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களுடன் மற்ற மக்களும் கலந்து கொண்டு தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

ஈழத்தமிழர்களின் உண்மையான நிலைமையை வெளிப்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் ஜேர்மன் மொழியில் பகிரப்பட்டன மற்றும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் “Die Linke ” கட்சியைச் சேர்ந்தவருமான Ferat Koçak இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கு தனது உறுதுணையைக் காண்பித்ததோடு ஈழத்தமிழர்கள் சார்ந்த ஜேர்மன் நாட்டின் மௌனத்தையும் கண்டித்தார்.

தொடர்ந்து குர்த் சமூக பிரதிநிதிகளும் மனித உரிமைப் செயற்பாட்டாளர்களும் தங்களது உரைகளை நிகழ்த்தினார்கள்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை தெரிவித்தனர்.காலநிலை சீராக இல்லாத நிலமையிலும் போராட்டம் உணர்வுபூர்வமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.

அண்மைய பதிவுகள்