ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிப்பதற்கு சாணக்கியன் 60 கோடி ரூபாவைப் பெற்றுள்ளார் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 60 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளார் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (11.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலானது மக்களின் தலையெழுத்தை மாற்றி அமைப்பதற்கான பாரிய எதிர்ப்பார்ப்பை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 2022 ஆம் இடம்பெற்ற போராட்டத்தின் பின் பெருபான்மை இனத்தவர்களின் ஆட்சியில் மக்கள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகிய நிலையில் தற்போது நடைபெறபோகும் தேர்தலில் பெருபான்மை இனத்தவர்களையும் தாண்டி தமிழர்களின் செல்வாக்கானது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோர் தமிழ் மக்களின் உரிய பிரச்சினைகளை தீர்க்காத காரணத்தினால் இன்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனடிப்படையில், வரப்போகும் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளனர்.
இது குறித்து அரசியல் வட்டாரங்கள் இடையே பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் காசுக்காக ஒரு தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்வேன் என்ற உத்தரவாதத்தை ரணிலுக்கு வழங்கி இருப்பதனால் தான் ஜனாதிபதி இவ்வளவு பாரிய தொகையை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் குறித்து மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
