மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத் துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள் ளது.
சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள நியமனங்களை இடைநிறுத்துமாறும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும்வேளையில் இவ்வாறான பதவிகளை வழங்குவது சட்ட விரோதமானது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசாங்கம் தமது தேர்தல் தேவைகளுக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சட்டவிரோத நியமனங்களை ஆளுநர்கள் ஊடாக வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்த பின்புலத்தி லேயே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அவசர உத்தரவைப் பிறப் பித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
