வித்தியா கொலை சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் லலித் ஜெயசிங்க மற்றும் சிறிகஜனுக்கும் நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டணை வழங்கல்



வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிறிகஜனுக்கும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத் தண்டணை வழங்கி தீர்ப்பளித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சுவிஸ்குமாரை பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஷ்ட் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
50 ஆயிரம் ரூபா குற்றப் பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜனுக்கும் 4 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத் தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
