தேர்தல்களின்போது விரல்களுக்கு மை பூசும் முறைமை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் 2010ஆம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவானது கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்யப்பட்டால், அவர் அதி காரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, விரல்களுக்கு மை பூச வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு வாக்காளர் இரு இடங்களில் வாக்களிக்க வாய்ப்புள்ளது என்றதன் அடிப்படையில் விரல் மை பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
தனி நபர்களின் பதிவை கணினி மயமாக்கும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் ஒரே மாதிரியான பெயர்கள் கண்டறியப்படும் என்றும், அடையாள அட்டை எண்கள் போன்றவை சரிபார்க்கப்படுவதால், இரு இடங்களில் தனிநபரின் வாக்கு கள் பதிவாவதற்கு வாய்ப்பில்லை என அவர் கூறினார்.
எனவே, விரல்களுக்கு மை பூசுதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
