மருத்துவர் வரதராஜாவின் 'தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள்' என்னும் நூல் சிட்னியில் வெளியீடு








தமிழினப் படுகொலையின் சாட்சியும், 2009 வன்னி போர்க் களத்தில் இறுதிவரை பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவருமான மருத்துவர் வரதராஜாவின் 'தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள்' என்னும் நூல் சிட்னியில் வெளியிடப்பட்டது.
இந்த நூல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட், மெல்பேர்ண் நகர்களில் ஏற்கனவே வெளியாகியது.
இறுதிப் போரில் தாயக மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தின் போது மகத்தான சேவையாற்றிய மருத்துவரை மதிப்பளிக்கும் வண்ணம் சிட்னியில் புத்தக வெளியீடும் நேரடி சந்திப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாக் டவுண் நகர நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வதேசம் எங்கும் ஈழத்தமிழர்களின் பலத்த ஆதரவுடன் வெளியிடப்பட்ட வைத்தியர் துரைராஜா வரதராஜாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஆங்கில மொழியில் ரஜீ பட்டீசன் எழுதிய “தமிழினப் படுகொலையின் சொல்லப்படாத உண்மைகள்" என்பது ஈழத் தமிழர்களின் துயரமான வரலாற்றையும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களையும் ஆவணமாக்கும் ஒரு முக்கியமான நூலாகும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
