ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு.

1 year ago


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன், எஸ்.குகதாசன், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை கூட்டம் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய பதிவுகள்