
வன்னித் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனம் உட்பட இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சி 29,711 வாக்குளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
ஜனநாயக தேசியக் கூட்டணி 9,943 வாக்குளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,492 வாக்குகளையும், கோடாரி சின்னத்தில் இலக்கம் 7 இல் போட்டியிட்ட சுயேச்சைக்குழு 7,484 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6,570 வாக்குகளையும், கரும்பலகை சின்னத்தில் போட்டியிட்ட 23 ஆம் இலக்க சுயேச்சைக்குழு 3,683 வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 1,732 வாக்குகளையும் பெற்றுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
