மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

1 year ago

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மீரான் சாய்பு முகமது மரசூ என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணி யாற்றியுள்ளார். கடந்த 17ஆம் திகதி உறக்கத்திலிருந்த போது கட்டிலிலிருந்து தவறி வீழ்ந்து மயங்கினார்.

அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.