யாழ். கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து.

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் நேற்று நடைபெறவிருந்த மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து செய்யப்பட் டது.
இதனால், யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை ஆரம்பமாவது மேலும் தாமதமாகும் என்று தெரிய வருகிறது.
மாஹோ முதல் அநுராதபுரம் வரையான ரயில் பாதை திருத்திய மைக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஜனவரி 7ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த ரயில் சேவை கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்றைய தினம் மாஹோவிலிருந்து அநுராதபுரம் வரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நடைபெற விருந்தது.
ஆனால், சுரங்கப் பாதை மற்றும் 6 ரயில் நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை என்பதாலும் சமிக்ஞை விளக்கு அமைப்பை நிறுவும் பணி முழுமைய டையவில்லை என்பதாலும் பரீட்சார்த்த ரயில் ஓட்டம் நிறுத்தப்பட்டது என்றும் தெரிய வரு கின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
