
வருடாந்த யூனைட்டெட் ஜூயிஷ் அபீல் 'வோக் வித் இஸ்ரேல்' நிகழ்வை முன்னிட்டு, டொரண்டோவில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு 56 ஆவது ஆண்டு அனுஷ்டிப்பாக நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. "நிகழ்வு பாதுகாப்பாகவும், குறுக்கீடுகளின்றியும் நடைபெறும் என நம்புகிறோம்," என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையில், மற்ற ரொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரும், ஒன்டாரியோ மாகாண பொலிஸாரும் பங்கேற்கவுள்ளனர்.
வட யார்க்கில் உள்ள சுமார் நான்கு கிலோ மீற்றர் பாதையில், சுற்றுவட்டார பகுதியில் பொலிசார் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர்.
சிலர் இந்த நிகழ்வை குழப்ப திட்டமிட்டிருப்பதை பொலிஸா அறிவதாக போக் தெரிவித்தார்.
"அமைதியான கூட்டங்கள் மற்றும் கருத்துப் பரப்பலுக்கான உரிமையை பாதுகாக்கிறோம். ஆனால், அச்சுறுத்தல், தொந்தரவு, வன்சொற்கள் அல்லது குற்றச்செயல்கள் என்பனவற்றுக்கு இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
