வடமாகாண திணைக்கள உயர் பதவிகளுக்கு 3 பேர் நியமனம்

1 year ago


வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும். புதிய அதி காரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்ன டத்தை திணைக்களத்தின் ஆணை யாளராக திருமதி சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி யும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று வழங்கி வைக்கப்பட்டன.