இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.





இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வீரமணியை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்த முதலாவது தமிழர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நாளை சனிக்கிழமை (24) பிற்பகல் 3 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே தமிழக அரசியல்வாதியும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்கினராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கி.வீரமணி நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
அத்தோடு, சிறப்புரையினை தென்னிந்தியத் திருச்சபையின் ஆயர் கலாநிதி வி.பத்மதயாளன் ஆற்றவுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
