வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு
1 month ago

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
