வவுனியா மதவாச்சி கட்டுவெல மயானத்துக்கு அருகிலுள்ள குழியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவெல மயானத்துக்கு அருகிலுள்ள குழியில் நேற்று மாலை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை மேற்படி பெண் அணிந்துள்ளார்.
அத்துடன் பெண்ணின் அருகில் இருந்த பையில் இருந்து கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ. சபை பஸ்ஸில் பயணித்த சிட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலில் பல அடி காயங்கள் காணப்படுகின்ற நிலையில், இதுவொரு கொலை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மதவாச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
