யாழ். மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் மே மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கைதுகள் தொடர்பில் 180 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம்(30) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் 51 வழக்குகளும், ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் 8 வழக்குகளும், கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 121 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தின் யாழ். பொலிஸ் பிராந்தியம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தப் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
