யாழ்.செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். எம்.பி கஜேந்திரகுமார் வலியுறுத்து

யாழ்.செம்மணிப் புதைகுழியை மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், அகழ்வுப்பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது:-
செம்மணியில் மிகப்பெரிய மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், புதைகுழி உள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
எனவே, இந்த விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்துமாறு கோருகின்றேன். அகழ்வுப் பணிகள் இடம்பெறும் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அத்துடன், அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரியுடன் தொடர்புடைய விடயங்களைச் செயற்படுத்துவதற்கும் போதுமான அளவு நிதி இல்லை எனக் கூறப்படுகின்றது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாள்களுக்குக்கூட போதாதென மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதி இல்லாமல்போனால் அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய அச்சம் உள்ளது.
எனவே, தேவையான நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கத்துக்குத் தேவையேற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுத்தர எம்மால் முடியும்.
உண்மை கண்டறியப்படவேண்டும். சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
