உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளிகளை இனங்காணும் பரிசோதனை முன்னெடுப்பு




உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளிகளை இனங்காணும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மாவட்ட தொற்றா நோய்ப் பிரிவு மருத்துவர் க. றஞ்சன் தலைமையில் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்ற மக்களிடம், நீரிழிவு பரிசோதனை இடம்பெற்றது.
இதன் மூலம், பல நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாளை மறுதினம் 15 ஆம் திகதி வரை, நீரிழிவு வாரமாக பிரகடனப்படுத்தி, நோயாளர்கள் இனங்காணப்படவுள்ளனர்.
அந்த வகையில், கண்டாவளை வைத்திய அதிகாரி பிரிவில், குறித்த வாரத்தில் காலை 8.30 மணி முதல் மக்கள் பரிசோதனையை மேற்கொண்டு நீரிழிவு நோய் நிலைமையை அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிப்பு.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
