




ரஷ்யா - உக்ரைன் இடையில் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் முக்கிய திருப்பமாக இருநாடுகளும் 190 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளன.
இந்த விடயம் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து வருகிறது.
இதனால் இரு தரப்பிலும் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன.
இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையே சிறைப்பிடித்தவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது.
விடுவிக்கப்பட்ட போர்க் கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இந்த நடவடிக்கையால் ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
ஏற்கனவே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
