மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி.
10 months ago






மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (29.08.2024) இடம்பெற்றது.
கடந்த கால யுத்தத்தின்போது காணாமல் போயுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக்காலச் சூழலில் தங்களுடைய மனங்களில் உட்கிடக்கைகளாக பதிந்த பல விடயங்களை சித்திரங்களாக வரைந்து இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
