சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம்

1 year ago


சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர்  (பா.ம.க.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறைகளை கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அத்துமீறி கைது செய்யப்படு வதோடு, ஆண்டுக் கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இவற்றைக் கண்டித்தே நேற்று முன்தினம் இந்தப் போராட்டத்தை தாம் முன்னெடுத்ததாக பா.ம.கவினர் கூறினர். 

அண்மைய பதிவுகள்