மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்தது

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவுக்குப் பின் பகுதியில் திடீரெனத் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் இதனை அவதானித்த மக்கள் விரைவாகச் செய்யப்பட்டதன் அடிப்படையில் தீ பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்ததுடன் முழுமையாகத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
மக்கள் ஒன்றிணைத்து செயற்பட்டதன் அடிப்படையில் பெரும் தீ விபத்தானது தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
