யாழ். வடமராட்சியில் நேற்று கரை யொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளைப் பொலிஸார் மீட்பு
6 months ago

யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் நேற்று கரை யொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல் மற்றும் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன.
இதன்போது மியன்மாரில் இருந்து இந்த நினைவாலயம் வந்து இருக்க லாம் என நம்பப்படுகின்றது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத் தைத் தாங்கிய பல மரபு அம்சங்கள் காணப்பட்டன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும், செப்பேடுகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்கள் தற்போது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப் பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
