காணாமலாக்கபட்ட எனது பிள்ளையை விடுவிப்பதாக்க் கூறி 13 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்ற புலனாய்வுப் பிரிவு

காணாமலாக்கபட்ட எனது பிள்ளையை விடுவிப்பதாக கூறி 13 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்று புலனாய்வு பிரிவினர் என்னை ஏமாற்றிய நிலையிலும் என்னுடைய பிள்ளையை தொடர்ச்சியாக தேடி வருவதாகவும் வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த தனது பிள்ளையை இழந்த கமலி என்னும் தாய் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினால் காணாமலாக்கபட்ட உறவுகளின் 3007 ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
2007-10-14 அன்று பாடசாலை சென்ற எனது பிள்ளை வீடு திரும்பவில்லை.ஒவ்வொரு இராணுவ முகாம்களாக தேடி தடி எனது பிள்ளையை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக புலனாய்வு பிரிவினர் (சிஐடியினர்) உன்னுடைய பிள்ளை உயிருடன் உள்ளான் .பதின்மூன்று லட்சம் ரூபாய் பணம் தந்தால் உன்னுடைய பிள்ளையை நாங்கள் விடுதலை செய்வோம் என தெரிவித்து பணத்தினை பெற்றுக் கொண்டனர்.
என்னிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்றதிலிருந்து அவர்களுடைய தொலைபேசி விலை அந்த புலனாய்வு உத்தியோகத்தரின் பெயர் சமநல பண்டார ஆகும் தொடர்ச்சியாக இந்த மாற்றத்தினை தொடர்ந்தும் என்னுடைய பிள்ளையை நான் தேடி தேடி அலைந்தேன் 2022.03.28 ஆம் திகதி என்னுடைய கணவர் இயற்கை எய்திவிட்டார் கணவனை இழந்த பொழுதிலும் என்னுடைய பிள்ளை எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக நான் போராடி வருகின்றேன் தயவுசெய்து என்னுடைய பிள்ளையை அடையாளப்படுத்துவதற்கு உதவி புரியுங்கள் என தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
