முல்லைத்தீவில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது.






முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்தவர்களையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சிலிண்டரை கட்டிக் கொண்டு, அதனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்வதற்கு தயாராக இருந்துள்ளனர்.
அதனையடுத்து, குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட போது தேர்தல் பதாதைகள் காணப்பட்டுள்ளன.
மேலும், குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள் மற்றும் சிலிண்டர், மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
