மாகாண சபை தேர்தலை நடத்துவது 13ஜ நடைமுறைப்படுத்த உதவும்- இலங்கை ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்து.








மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம்-நீதி கௌவரம் சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாசைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும்.
இந்த நோக்கத்தை அடைய மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும் என்றுள்ளது.
மேலும், இந்த சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்த ஜெய்சங்கர், இலங்கை இந்தியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரவுடன் விவாதித்தார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்து செய்திகளையும் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரவிடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதியாக அநுர குமார திஸநாயக்க பதவியேற்ற பின்னர் நாட்டுக்கு வருகை தந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
