இந்திய விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு 999 வெடிகுண்டு மிரட்டல்கள்.-- விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு


இந்தியாவின் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன என அந்த நாட்டின் துணை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது 2023 இல் பெறப்பட்ட அச்சுறுத்தல்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்று அமைச்சர் முரளிதர் மொஹோல் கூறியுள்ளார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல்களில் 500 இற்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் ஒக்டோபர் இறுதி இரண்டு வாரங்களில் பெறப்பட்டன.
போலி அச்சுறுத்தல்களின் வியத்தகு அதிகரிப்பு, விமான அட்டவணையில் அழிவை ஏற்படுத்தியது.
இதனால் சேவைகளில் பரவலான இடையூறு ஏற்பட்டது.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் 256 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2014-2017 இற்கு இடையில் இந்திய அதிகாரிகள் விமான நிலையங்களில் வெறும் 120 போலி வெடிகுண்டு எச்சரிக்கைகளை மாத்திரம் பதிவு செய்திருந்தனர்.
இவற்றில் 50 சதவீதமானவை நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களான டில்லி மற்றும் மும்பைக்கு விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
