யாழ்.தென்மராட்சியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5 months ago

யாழ்.தென்மராட்சியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்.தென்மராட்சி - மிருசுவிலை சேர்ந்த நடராசலிங்கம் புஸ்பராணி (வயது 67) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 08ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 11ஆம் திகதி சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
