
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, திம்பிலி பகுதியினைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதல் என்ற பெயரில் காதலித்து தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அங்கு சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
