
வாகனத்தால் மோதப்பட்டு முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்தார். இது திட்டமிட்டு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட விபத்தா என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மன்னார் - மாந்தை மேற்கு - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் முன்னாள் போராளியான கோபால கிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் (வயது - 42) என்பவரே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவ தாவது, உயிரிழந்தவர், முன்னதாக வீட்டுக்கு முன்பாக நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்தச் சமயம் வாகனம் ஒன்று சென்றதையடுத்து, “என்னை வாகனத்தால் மோதிவிட்டு செல்கின்றனர்”, என்று அவர் சத்தமிட்டுள்ளார்.
அவரின் குடும்பத்தினர் விரைந்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். எனினும், அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார்.
இதனிடையே, குடும்பத்தினர் சென்ற போது விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
உயிரிழந்த பிறேம்குமார் ஒரு கால் மற்றும் ஒரு கையை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
