கடைசிக் கட்ட கட்சி தாவல் 17,18 இடம்பெறும் என எதிர்பார்க்கும் அளவுக்கு கொழும்பு பரபரப்பாகவுள்ளது.
10 months ago

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடைசி கட்ட தாவல் எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதென தெரியவருகின்றது.
இதன்படி ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பக்கம் தாவவுள்ளனர் எனவும், சஜித் கூட் டணியில் உள்ள மாகாண மட்டத்திலான அரசியல் பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதி பக்கம் தாவவுள் ளனர் எனவும் அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன எனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் டம்மி வேட்பாளர்களாக களமி றக்கப்பட்ட சிலரும் பிரதான வேட்பாளர்களை ஆதரிக்கும் அறிவிப்பை கடைசி நேரத்தில் வெளியிடுவதற்கு தயாராகி வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
