இலங்கையில் ரஷ்ய பிரஜைகள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவிப்பு
8 months ago

இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமது நாட்டு பிரஜைகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பே பகுதியில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.
அறுகம்பே பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
