பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்வருங் காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி
"ஆங்கிலேயர்கள் இலங் கையைவிட்டு வெளியேறிய போது, வடக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களை கருத்தில் கொண்டு நியாயமானதோர் அதிகாரப் பகிர்வை வழங்காததன் காரணமாக, இவ் விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே எதிர்வருங்காலங்களில்
கட்சி தலைமையிலான அரசாங்கம் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் என நம்புகின்றேன்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொட ரிலும், அதன் பின்னரும் இலங் கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை அவர்கள் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும்"- என்றார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சிறீதரன் எம்.பி., தொழிற்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்து அக்கறையுடன் கருத்துகளை வெளியிட்டு வந்தி ருப்பதால் இனப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பன எதிர்வருங் காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகரும்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது அரசியல் தீர்வு குறித்த அவரது கேள்விக்கு, "சமஷ்டி அடிப்படையிலான நியாயமான தீர்வு அவசியம்" எனத் தான் பதில ளித்தார் என்றும் அதனை அவர் கரிசனையுடன் கேட்டார்.
ஆகவே, எதிர்வருங்காலங்களில் சர்வதேச விசாரணையை ஊக்கு விக்கும் வகையிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுசெல்லும் விதமாகவும் பிரிட்டன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
