
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பமாகும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாகோ- அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதிய புகையிரத பாதை மாகோ புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள பழைய புகையிரத பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி திறந்து வைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்திய உதவியுடன் மாகோ - வவுனியா - காங் கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டன. தற்போது மாகோ - அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை திருத்தம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
