
1995 ஜூலை 9ஆம் திகதி விமானப் படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 153 பொதுமக்கள் தொடர்பான வரலாற்று ஆவண நூல் லண்டனில் வெளியிடப்பட்டது.
வல்வை அனந்தராஜ் எழுதிய இந்த ஆவண நூல் நேற்று முன்தினம் லண்டனின் - குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையை ஆசிரியர் கந்தையா பாலகிருஸ்ணனும் வெளியீட்டு உரையை மகாலிங்கம் சுதாகரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன், சிவ சிறிராம் வாகீசக் குருக்கள்,அரசியல் -இராணுவ ஆய்வாளர் கலாநிதி பிரபாகரன் மருத்துவர் திருமதி இந்துமதி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
