லெபனானின் மருத்துவமனை அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

1 year ago



லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மருத்துவமனையொன்றிற்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரபிக் ஹரீரி பல்கலைகழக மருத்துவமனையின் வாகனத் தரிப்பிடத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

லெபானின் பிரதான மருத்துவமனைகளில் குறித்த மருத்துவமனையும் ஒன்றாகும்.

இதில் 57 பேர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இரவிரவாக இடம்பெற்றன.

இந்த தாக்குதலில் மூன்று கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இடிபாடுகளின் கீழ் எத்தனை பேர் சிக்குண்டுள்ளனர் என்பது தெரியவில்லை என மீட்பு பணியாளர் தெரிவித்துள்ளார்.