பாராளுமன்றம் கடந்த 02 ஆம் திகதி கூடியபோது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கடன் மறுசீரமைப்பு உடன் படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒன்றரை மணி நேரம் மாத்திரமே இந்த அமர்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகை, இது போன்ற குறுகிய அமர்வுக்கு செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
