கனடாவிற்கான விமான சேவையை நிறுத்துவதாக பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு

1 year ago


கனடாவிற்கான விமான சேவையை நிறுத்திக் கொள்வதாக பிரபல விமான சேவை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான பிளே ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கனடாவிற்கான சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

மலிவான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக பிளேயர் எயார் லைன்ஸ் கருதப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியின் பின்னர் கனடாவிற்கான விமான சேவைகள் இடம்பெறாது என ப்ளே எயார்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐஸ்லாந்தில் இருந்து இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் செலவு உள்ளிட்ட ஏனைய செலவுகள் அதிகரிப்பு காரணமாக சேவையை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் விமான சேவையை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கனடாவிற்கு விமான சேவைகளை முன்னெடுத்து வந்த சில சிக்கன விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன.