யாழ்.குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
6 months ago

யாழ்.குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு மீனவர்கள் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், ஒரு மீனவருக்கு நேற்று உடல் சுகயீனம் ஏற்பட்டது.
அவரை ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
