

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ்.ஜதுசன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஒரு வருடத்துக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர், உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பிய நாட்டுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா-ரஷ்ய எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(அ)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
