நாங்கள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப ஊழலை சகித்துக்கொள்ளமாட்டோம். அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

1 year ago




இலஞ்சம் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஏற்கனவே ஊழல் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பைத் தளமாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசாங்கம் ஏற்கனவே சில     விடயங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நெறிமுறையான நிர்வாகம், ஊழலை ஒழித்தல் அரச சேவையில் வினைத்திறன் சட்டத்தின் ஆட்சி பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கலாசாரத்தை வளர்ப்பதற்கு ஜனாதிபதி அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளார்.

பொருளாதார வெற்றியுடன் இந்த முக்கியமான தூண்கள் இணைந்திருக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

நாங்கள் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ப இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம் - என்றார். 

அண்மைய பதிவுகள்