ஜப்பானில் சூறாவளி அச்சம் காரணமாக விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானில் மற்றொரு சூறாவளி அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 280 உள்நாட்டு விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 191 உள்நாட்டு மற்றும் 26 சர்வதேச சேவைகளை இரத்து செய்துள்ளது.
மேலும், ஜப்பானின் புல்லட் தொடருந்து சேவையின் முக்கிய பகுதிகளும் இன்று இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த சூறாவளி தொலைதூர பசுபிக் தீவான சிச்சிஜிமாவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் கெமர் மொழியில் புளி என்று பொருள்படும் அம்பில் என்ற பெயர் கொண்ட இந்த சூறாவளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசுபிக் பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிழக்குப் பகுதிகளில் கடுமையான காற்று, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என ஜப்பானின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
