யாழில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த 06 பேரில் ஒருவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் காயமடைந்த 06 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.
கோப்பாய் மத்தியைச் சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்பவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்று தகனக் கிரியைக்காகப் பூதவுடலைக் கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்துக்கு எடுத்துச் சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
