
நாட்டை ஆட்சி செய்வதிலேயே தனது கவனம் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டொரன்டோ - சென் போல்ஸ் தொகுதியின் இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்தது இந்தத் தோல்வியின் பின்னர் ட்ரூடோவின் பதவி குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தத் தோல்வி குறித்து விவாதிக்க லிபரல் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் மறுத்துள்ளார்.
இது போன்ற ஒரு கூட்டத்திற்கான வலியுறுத்தல் கட்சியின் பல மட்டங்க ளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் இத்தகைய கூட்டத்தை கோரியுள்ளனர். வேறு சிலர் அமைச்சரவை மாற்றமொன்றை வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் டொரன்டோ சென் போல்ஸ் தொகுதி இடைத்தேர்தல் குறித்து லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசியில் உரையாடி வருவதாக ட்ரூடோ தெரிவித்தார்.
கருத்துக் கணிப்புகளில் பிரதமருக்கு • ஆதரவு குறைந்து வரும் நிலையில் பதவி விலகுமாறு வெளியாகும் கோரிக்கைகளை அவர் தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
