
டொரண்டோவில் பதினாறு வயதுச் சிறுவன் சுட்டுக்கொலை அதே வயதில் இரண்டு சிறுவர்கள் கைது!
கனடாவில் 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் டொரண்டோ நகரின் மேற்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திங்கட்கிழமை அதிகாலை12மணிக்கு சற்று பிறகு, King Street West மற்றும் Jameson Avenue. பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து துப்பாக்கி சூட்டுச் சத்தம் கேட்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சிறுவன் ஒருவனை கண்டறிந்தனர். அவர் உயிரை பாதுகாக்கும் நோக்கி அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வியா ழக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர்.
இருவரும் மீதும் இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வியாழக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
