கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திர சிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில், இந்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
