
காவேரி கலாமன்றத்தின் 'பிரபஞ்ச நேசம்' இயற்கை நேய செயலணியின் நான்காவது செயலமர்வு நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த செயலர்வில் காலநிலை மாற்றமும் உயிரியல் பல் வகைமையும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
செயலமர்வின் வளவாளராக காவேரி கலா மன்றத்தின் நிர்வாக இயக்குநர் யோசாவா செயல்பட்டார்.
இந்த செயலமர்வில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை நேய செயலணியின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
செயலமர்வின் முடிவில், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
