இலங்கையில் ஊழல் அரசியல்வாதிகள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கடவுள்களிடம் மன்றாட்டம்

1 month ago



தாம் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக கடந்த வாரம் 50க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுள் அதிகமானவர்கள் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள். இவர்களுள் 20க்கும் அதிகமானவர்கள் கதிர்காம தேவாலயத்துக்குச்சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் பலர் அநுராதபுரம் சென்று சிறிமகாபோதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுத் தேரர்களின் ஆசியையும் பெற்று வந்துள்ளனர்.

இன்னும் சிலர் இந்தியாவுக்குச் சென்று பெரும் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.



அண்மைய பதிவுகள்