இஸ்ரேல் இராணுவத்தின் போர்க்குற்றவாளி ஒருவர் இலங்கையில், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தல்

இஸ்ரேல் இராணுவத்தின் போர்க்குற்றவாளி ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளார் என்றும், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக் கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ அதிகாரியான கல்ப்பெரென்புக் என்பவரே இலங்கையில் உள்ளார்.
அவரைக் கைதுசெய்வதற்கு எந்தத் தாமதமும் இல்லாமல் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 'தஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரியான கல்ப் பெரென்புக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவராவார்.
எனவே, அவரைக் கைது' செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பது இலங்கை அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் என்றும் 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' சுட்டிக்காட்டியுள்ளது.
த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷனின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இராணுவ அதிகாரி கல்ப்பெரென்புக் இஸ்ரேலால் உடனடியாக நாடு திரும்புமாறு பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்று மாலை இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார்.
'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' என்பது போர்க்குற்றத்தில் ஈடுபடும் இஸ்ரேலிய அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
